யாழ்ப்பாண மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

296 0

யாழ்ப்பாண பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ அணைப்பு படையினரின் உதவியுடன் தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் தீயினால் குறித்த விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment