ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் பிரான்ஸிஸ் அடம்ஸன்

276 0

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ்  சின்னையாவை சந்தித்துள்ளார்.

கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஃபிரான்ஸிஸ் அடம்ஸனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக பூரண மரியாதையுடன் வரவேற்றனர்.

புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அடம்ஸன் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதன் பின்னர் இரு தரப்பினரும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான விவாதங்களில் ஈடுப்பட்டனர்.

Leave a comment