யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ள எழுதாரகை!

357 0

எழுவைதீவு மற்றும் அனலைதீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிதாக கட்டப்பட்ட எழுதாரகை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 5ம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,

எழுவைதீவு மற்றும் அனலைதீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிதாக கட்டப்பட்ட எழுதாரகை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 5ம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது . அதாவது மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் கட்டப்பட்ட குறித்த படகானது 137 மில்லியன் ரூபா செலவில் டொக்கியாட் நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட குறித்த படகில் ஒரே தடவையில் 40 பயணிகளும் அவர்களின் பொதிகளும் சுமந்து செல்லக் கூடிய நவீன வடிவில் கட்டப்பட்ட படகு என்பதனால் இது ஏனைய படகுகளின் வடிவத்தில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது.

அதாவது பொருட்களை முன்னால் என்று பயணிகளையும் ஒரே தடவையில் பின்னால் ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டமையினால் குறித்த படகு சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு கட்டப்பட்ட படகில் தொலைக்காட்சி வசதி மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகள் என்பன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சதுர வடிவம் கொண்ட படகு என்பதனால் கடற்பாறைகள் காணப்படும் இடத்தில் இரவு நேரப் பயணம் சற்று சிரமத்தை உண்டு பண்ணும் .

இதேநேரம் நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்ட படகு இரவு  காலித் துறைமுகத்தில் தரித்து நின்றது இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு இன்றைய தினம் இரவு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்று நாளை காலை ( ஞாயிறு) அங்கிருந்து புறப்பட்டு இரவு ஒலிவில் துறைமுகத்தினை அடைந்து அங்கு எரிபொருளும் நிரப்பப்பட்டு செவ்வாய்க் கிழமை ஊர்காவற்றுறையை வந்தடையவுள்ளது.

Leave a comment