சுதந்திர கட்சியின் ஆண்டு பூhத்தி விழாவில் மஹிந்த தரப்பு கலந்து கொள்ளும் – துமிந்த திஸாநாயக்க

271 0

நாளை இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு பூhத்தி விழாவிற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி உள்ளிட்ட கட்சியுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

 இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார.

 எனினும், நாளை இடம்பெறும் நிறைவாண்டு நிகழ்வில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பில், எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 இதேவேளை, குறித்த மாநாட்டில் தாம் உட்பட்ட தமது குழுவினர் கலந்து கொள்ளப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment