இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்த அதேவேளை, இந்தியாவின் திட்டங்களை கையாளும் முறைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுஷ்மா சுவராஜ் கடந்த 31ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தார்.
அவர் இலங்கையில் தங்கியிருந்த வேளை, அரசியல் ரீதியான பல்வேறுமட்ட சந்திப்புக்ளை மேற்கொண்டதன் பின்னர், நேற்று மாலை நாடு திரும்பினார்.