தடைசெய்யப்பட்ட இராசயனமான அமோனியம் சல்பேட் – க்ளைபோசெட்டுடன் மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆயிரத்து 125 கிலோ அமோனியம் சல்பேட் க்ளைபோசெட் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய இந்தியர்கள் மூவரும், மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகளை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த சந்தேகத்துக்குரியவர்களை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து மன்னார் கடற்பகுதிக்கும் பின்னர் அங்கிருந்து புத்தளம் களப்பு பகுதிக்கும் குறித்து மருத்துகளை கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மருத்துகளை வனாத்தவில்லு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து குறித்த மூன்று பேரவையும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொள்ள புத்தளம் நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு அனுமதியளித்துள்ளது.