புதிய அரசியலமைப்பினுடாக நாடு துண்டாடப்படும் என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் சில அரசியல்வாதிகள் தோற்றுவிக்க முயற்சிப்பதாக அமெரிக்க உயரதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல.
ஆனால், புதிய அரசியலமைப்பு மூலம் நாடுதுண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தை சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
எனினும், நாடு பிரிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நாட்டில் வாழ்கின்றஒவ்வொருஆணும் பெண்ணும் தாங்கள் இந்தநாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்றும், இந்தநாடுதங்கள் எல்லோருக்கும் சொந்தமானதென்றும் உணரக்கூடியவகையில் அமையவேண்டுமென்றும் கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாக 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் நாட்டிற்குத் திரும்பிவரவேண்டும் என்று தாம் விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.