இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு வலய நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜனாதிபதி

904 0

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு வலய நாடுகள் முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று தம்மை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வலய நாடுகளிலும், வலயத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நேரடியாக தொடர்புபடுகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், இரு நாடுகளின் நன்மைக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு பொருளாதார திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான சுமுக உறவுகள் மற்றும் அந்நியோன்ய அரசியல் நிலைமைகள் காரணமாக எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Leave a comment