எதிர்வரும் உலக கிண்ண போட்டிகள் வரை தாம் சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது உடல் தகுதியினை அவனத்தில் கொண்டே இது சாத்தியமாகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய அணியுடன் இடம்பெறும் போட்டிகளில் தமது விளையாடு தரம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து அவதானித்து வருவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற 4வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் விக்கட்டை எடுத்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை எடுத்த சாதனை பெற்றார்.
எவ்வாறாயினும் மலிங்கவின் தலைமையின் கீழ் செயற்பட்ட இலங்கை அணி 168 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக்கொண்டது.
இதேபோல், முன்னதாக இடம்பெற்ற 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி கண்டது.
இதுதவிர இதற்கு முன்னர் இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியமை நோக்கத்தக்கது.
இந்தநிலையில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள 5வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியினையடுத்து 20க்கு 20 போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.