20வது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்படும் – அஜித் பீ பெரேரா

4612 0

20வது அரசியல் அமைப்பு திருத்தம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்படுகின்றமையானது அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக அமையாது என பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

குறித்த சட்ட மூலத்தை மாகாண சபைகள் ஆராய்வதற்காகவே அதனை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது, மாகாண சபைகளினால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் தொடர்பான யோசனைகள் கருத்தில்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில், குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த சட்டத்தை மாகாண சபைகள் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அது மத்திய அரசின் சட்டவாக்கத்திற்கு இடையூறாக அமையாது என தெரிவித்த அவர், குறித்த சட்டமூலமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாண சபை தேர்தல் சிலகாலங்களுக்கு பிற்போடப்படுகின்றமையானது, அரசியல் பிரவாகத்தில் எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது எனவும் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

Leave a comment