கொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய வலயமாக இலங்கை மாறியுள்ளமையை அடுத்து சர்வதேச கொக்கெய்ன் கடத்தல்காரர்களின் பார்வை இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கொக்கெய்னை சீனிக்குள் வைத்து கடத்திய பல சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றன.
இதன்படி 6 தடவைகளாக கொக்கெய்ன் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டன.கொக்கெய்ன் தொடர்பில் உரிய கட்டுப்பாடுகள் இல்லாமை காரணமாக இலங்கை கொக்கெய்னின் மத்திய தளமாக மாறி வருவதாக அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
சீனியுடன் கொக்கெய்ன் தவறுதலாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதை நம்ப முடியாது.ஏனெனில் பிரேசிலின் சீனியை இறக்குமதி செய்யும் ஏனைய நாடுகளுக்கு ஏன் கொக்கெய்ன் செல்லவில்லை என்று அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு இதுவரை கடத்தி வரப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் நிறை 1170 கிலோகிராம் என்பதுடன் அதன் பெறுமதி 140 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.