சர்வதேச போதைப் பொருள் பரிமாற்றுத் தளமாக இலங்கை மாறி வருகிறது.

383 0

சர்வதேச அளவில் இலங்கை கொக்கொய்ன் போதைப் பொருள் பரிமாற்றுத் தளமாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, த ரொய்ட்டர்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில், கடந்த 14 மாதங்களில் 6 தடவைகள் பாரிய அளவான கொக்கெய்ன் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலன்களின் ஊடாகவே இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இவை தவறுதலாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டவையாக இருக்க முடியாது என்று குறித்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இதுவரையில் ஆயிரத்து 770 கிலோகிராம் கொக்கொய்ன் மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 140 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment