வடக்கு கிழக்கில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புதிய மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த வீட்டுத்திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, நேற்றையதினம் அவர் மீளப்பெற்றுக் கொண்டார்.
குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் சட்டத்தரணி, இந்த வீட்டுத்திட்டமானது அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் அமைச்சரவையின் அமைச்சர்களையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு புதிய மனுவைத் தாக்கல் செய்யும் வகையில், அதனை மீளப்பெற்றுக் கொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இது குறித்த விபரங்களை அவர் வழங்குகிறார்.
– சுமந்திரன்-