அமெரிக்காவில் ரஷிய தூதரகங்களை மூட அரசு உத்தரவு

413 0

ரஷியாவில் அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை ரஷிய அரசு பதவிநீக்கம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் மூன்று ரஷிய தூதரகங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை சமீபத்தில் அந்நாட்டு அரசு வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் தூதர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க ரஷியா முடிவு செய்தது. அதன்படி ரஷியாவில் தங்கியுள்ள 30 அமெரிக்க தூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மேலும் ரஷியாவில் இருக்கும் அமெரிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்பட்டுவரும் ரஷிய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வாஷிங்டனில் செயல்பட்டுவரும் ஒரு தூதரக அலுவலகம் மற்றும் நியூயார்க்கில் செயல்பட்டுவரும் துணைதூதரக அலுவலகம் ஆகியவற்றை மூடுமாறு ரஷிய அரசிற்கு, அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a comment