நாட்டின் பொருளாதாரத்தை 2020 ஆம் ஆண்டளவில் பலப்படுத்த தேசிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற இரத்தினக்கல கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் அல்லது மத்தியதர வருமானம் பெறும் நாடாக இலங்கை தொடர்ந்தும் இருக்க முடியாது.
உயர் வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும்.
அதற்காக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை தேசிய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் கூறியுள்ளார்.