நுவரெலிய மாவட்ட மருத்துவமனைகளின் குறைகளை தீர்ப்பதற்கான பல திட்டங்களை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று அறிவித்துள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன.