ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில்

482 0

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பிரதி செயலாளர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று அவரை சந்தித்தபோதே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பிரதி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வடக் மற்றும் தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனினும், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment