அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் செயலாளர் ஃப்ரான்ஸ் அடம்ஸன் (குசயnஉநள யுனயஅளழn) இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
கொழும்பில் இன்று ஆரம்பமான இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இலங்கை வரும் அவர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிராலயம் தெரிவித்துள்ளது.
நாளை தினம் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர பிராந்தியத்தல் சமாதானத்தைக் கட்டியெழுப்பதல் தொடர்பான குழுக் கலந்துரையாடலில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, அரவாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.