பொருளாதாரத்தை வலுப்படுத்துத்ம்  தேசிய பொருளாதார சபை கூடவுள்ளது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

348 0

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தம்மால் நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் முதற்தடவையாக கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பன இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை தேசிய விவசாயிகள் வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முழு நாடும் ஒன்றிணைந்த விரிவான விவசாய நிகழ்ச்சித்திட்டத்தை அந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எட்டு இலட்சம் ஹெக்டெயார் வயல் நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதற்குத் தேவையான 40 இலட்சம் புசல் விதை நெல்லை விவசாய சமூகத்திற்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

Leave a comment