சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் நாளையும் நாளை மறுதினமும் 150 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், வடமேல், வட மத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிக காற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.