அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.