இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

336 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் இலங்கையில் வந்துளனர்.

இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவை,  இந்திய இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்

Leave a comment