உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் வைத்து கையொப்பமிட்டுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த 20ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.