ரத்துபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் அனுர தேசப்பிரியவுக்கு பிணை

416 0

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய மற்றும் இராணுவ சார்ஜெண்ட் ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் பிணை வழங்கியது.

இவ்வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ரத்துபஸ்வல பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் வேண்டி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் அனுர குணவர்தன தேசப்பிரிய உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment