புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் இன்று ஆரம்பம்

318 0

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் 5ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

384 நிலையங்களில் 6,965 ஆசிரியர்கள் மூலம் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி 3,014 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் 305,728 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment