ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்து: அரைஇறுதியில் பிரேசில், ஜெர்மனி

328 0

201608150853243944_Olympic-men-Football-Brazil-Germany-in-semi-finals_SECVPFஒலிம்பிக் ஆண்கள் கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகள் அரைஇறுதிக்கு நுழைந்துள்ளன.

ரியோ ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான கால்பந்தில் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடந்தன. ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலையும், நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கையும், ஹோண்டுராஸ் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார், லுவான் கோல் அடித்தனர். நாளை மறுதினம் நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில்-ஹோண்டுராஸ், நைஜீரியா-ஜெர்மனி அணிகள் சந்திக்கின்றன. பெண்கள் கால்பந்தில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில்- சுவீடன், கனடா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.