அரலகங்வில பொலிஸ் பிரிவின் தம்மிந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை 05.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் வயது 22 எனவும் ஹோடியாதெனிய – பேராதெனிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் அரலகங்வில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.