தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிடில், வரும் காலங்களில் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையில் இருந்து விலகப் போவதாக, அனைத்து இலங்கை அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள சமரவீரவிடம், கலந்துரையாடலுக்கு அனுமதி கோரியுள்ளதாகவும், எனினும் இதுவரை அது கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்