ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

294 0

வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 21ம் திகதி சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment