டென்னிசில் மோனிகாவுக்கு தங்கப்பதக்கம்

319 0

201608150519142399_Monica-Puig-makes-Puerto-Rico-gold-medal-history-in-women_SECVPFரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி)- மோனிகா பிய்க்கும் (பியூர்டோரிகோ) மோதினர். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கார்பின் முகுருஜா, கிவிடோவா உள்ளிட்டோருக்கு ‘தண்ணி’ காட்டிய மோனிகா பிய்க் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
2 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் மோனிகா பிய்க் 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கெர்பரை வீழ்த்தியதோடு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்து புதிய வரலாறு படைத்தார். 22 வயதான மோனிகா பிய்க் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றை கூட தாண்டியது கிடையாது. உலக தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் அவர் ஒலிம்பிக் சாம்பியன் ஆகியிருப்பதன் மூலம் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

1948-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் பியூர்டோரிகோ 2 வெள்ளி, 6 வெண்கலம் மட்டுமே வென்றிருந்தது. முதல் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு 68 ஆண்டு காலம் தவம் இருந்துள்ளது. அவர்களின் ஏக்கத்தை மோனிகா பிய்க் தணித்துள்ளார்.