ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்!

2176 0

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவம் முற்றாக மறுக்கின்றது.

ஜெனரல் ஜெகத்சூரியவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது, விடுதலைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜித சேனாரட்ண கருத்துத் தெரிவிக்கும்போது, போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், போரில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகளும் மனித உரிமை மீறல்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment