நாட்டை காப்பாற்றிய எந்த ஒரு இராணுவ வீரரையும் ஒருபோதும் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல இடமளிக்கப்போவதில்லை என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை காப்பாற்ற ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு பாதுகாப்பு தரப்பினரும் சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல அரசாங்கம் இடமளிக்காது.
நாட்டின் சுயாதீன தன்மை பாதுகாக்கப்படும்.
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும் நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.