இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழங்கு விசாரணை இந்திய உயர்; நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது.
நேற்று இடம்பெற்ற இந்த விசாரணையின் போது பேரறிவாளன் தரப்பில், முன்னிலையாக வேண்டிய சிரேஷ்ட சட்டதரணி தமது தனிப்பட்ட அலுவல் காரணமாக முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து தமக்கு 2 வாரக்கால அவகாசம் கோரியமைக்கு அமைய இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது பரோல் விடுமுறையில் உள்ள பேரறிவாளன் சார்பில் உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கான தொடர்பு குறித்து கண்டறிவதற்கு மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை கடந்த 1997ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு அமைத்தது.
குறித்த முகமை, விசாரணையின் முன்னேற்றம் குறித்து ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள நீதிமன்றில் தாக்கல் செய்து வருகிறது.
அதில் தம்மை தொடர்பு படுத்தி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அது குறித்த தாம் அறிய விரும்புவதாகவும் பேரறிவாலன் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.