சயிட்டம் நிறுவனத்தை மூடும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அர வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அடுத்த மாதத்தில் சயிட்டமுக்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார்.
சயிடமுக்கு எதிராக நேற்று ஏற்படு செய்யப்பட்டிருந்த தீப்பற்றிய இரவு என்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் இதனைக் கூறினார்.
நாடு பூராகவும் பல பிரதேசங்களில் தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் நேற்று இரவு சயிட்டமுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சயிட்டம் நிறுவனத்தை மூடுவது சம்பந்தமாக அண்மையில் ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு இதுவரை நிறைவேற்றப்படாமை சம்பந்தமாக இந்தக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.