எச்சரிக்கை: இலங்கை தொடர்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

263 0

கணனிகளில் அதிக தீம்பொருட்கள் எனப்படும் மெல்வெயர் ஆபத்து உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 11ம் இடத்தில் உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய வலையமைப்பின் இடைக்கால இணைய பாதுகாப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பங்களாதேஸ் முதல் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், இந்தியா 13ம் இடத்தில் இருக்கிறது.

அண்மைக்காலமாக வளர்முக நாடுகளை இலக்கு வைத்தே இணையவழி தீம்பொருள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பில் நம்பிக்கையுடனும், போதிய அறிவுடனும் செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Leave a comment