தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது யுத்த குற்றங்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுவது உண்மையில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேசிலின் இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளை தாக்குதல், பொது மக்களை கொலை செய்தல், கடத்திச் செல்லுதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஜெனரல் ஜகத் ஜயசூரிய கட்டளையிட்டுள்ளதாக அந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.