செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு இதுவரை தனக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல உறுப்பினர்களுக்கு ஆண்டு விழாவிற்கான அழைப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கேட்டே பிரதேசத்தில் உள்ள விகரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.