உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு இன்று சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பம் இடவுள்ளார்.
குறித்த சட்டமுலத்திற்கு இன்று சபாநாயகரின் கையொப்பத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சீர்திருத்த சட்டமூலம் சபாநாயகர் கருஜயசூரியவின் கையொப்பத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட உள்ளது.
அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும்.