இந்தியர்களின் திருவிழாவான ரக்ஷா பந்தன் இங்கிலாந்து முழுவதும் அந்நாட்டு ராணுவ படை வீரர்களால் இன்று கொண்டாடப்பட்டது. லண்டன் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திரில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் பாதுகாப்பு துறை இணை மந்திரி எர்ல் ஹோவ் கலந்து கொண்டார்.விழாவில் அவர் பேசியதாவது:-
அனைத்து சேவையாளர்களுக்கு நம்பிக்கையான வலிமையான அடையாளமாக இந்த ரக்ஷா பந்தன் விழா உள்ளது. ராக்கி கட்டிக் கொள்வது பரஸ்பர பாதுகாப்பு வெளிப்படும் அடையாளமாக உள்ளது. இந்து மதம் சேவை புரியும் அனைத்து தரப்பினர் மற்றும் பெண்கள் அவர்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
ராக்கி கட்டும் பழக்கும் கி.மு. 6-வது நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது. கடவுள் இந்திரன், அரக்க அரசன் பாலிக்கு எதிராக போருக்கு செல்லும் முன்பாக அவரது கையின் மணிக்கட்டு பகுதியில் புனித பாதுகாப்பு தாயத்தை அவரது மனைவி சாசி கட்டினார்.
இந்த விழா ராணுவ வீரர்களுக்கு அவர்களது கடைமையை வலியுறுத்தும் விதத்தில் முக்கியமானதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து ராணுவப் படைகளில் சுமார் 2 ஆயிரத்து 500 இந்து வீரர்கள் உள்ளனர். அவர்கள் தன்னுடைய நாட்டின் பழமையை போற்றும் விதத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறார்கள்.