அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இன்னும் தீரவில்லை என்று மாநில ஆளுனர் க்ரெக் அபட் தெரிவித்துள்ளார்.
ஹார்வி சூறாவளியை அடுத்து அங்கு மிக மோசமான காலநிலை நிலவி வருகிறது.
தொடர்ந்து மழைப் பெய்வதுடன், நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதுவரையில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹார்வி சூறாவளி தற்போது லூசியானா பிராந்தியத்தை தாக்கி வருகிறது