பேச்சுவார்த்தைகள் மூலம் வடகொரியா விவகாரத்தை தீர்க்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 25 வருடங்களாக அமெரிக்கா வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பணத்தையும் வழங்கி வந்திருப்பதாக அவர் தமது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வடகொரியா விடயத்தில் இன்னும் ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளுக்கு இடமிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரிவித்துள்ளார்.