மின்சார கதிரை மற்றும் யுத்தக் குற்ற நீதிமன்றம் என்பன நிச்சயமாக இல்லை என்பதை, அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவரும், முன்னாள் இராணுவ ஜெனரலுமான ஜகத் ஜெயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அவருக்கு எதிராக யுத்தக்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மின்சாரக் கதிரையும், யுத்தக்குற்ற நீதிமன்றங்களும் இல்லை என்று அரசாங்கம் கூறி வருகின்ற போதும், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.