தீப்பற்றிய இரவு போராட்டம் நேற்று

552 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரவு தீப்பந்தம் ஏந்திய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் பிரதான எதிர்ப்பு போராட்டம் பொரளையில் பேரணியாக ஆரம்பமான நிலையில் பந்தங்களை ஏந்தியவாறு லிப்டன் சுற்றுவட்டம் வரை பிரவேசித்து, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியில் சைட்டம் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதி நிதிகள், மாணவ அமைப்புக்கள், தொழில் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்காலத்தில் மாணவ போராட்டத்திற்கு மேலதிகமாக தொழில் சங்க நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment