டெல்லியில் வைத்து இலங்கையர் கைது

263 0

டெல்லி – சஹ்டாரா நகரில், ராஜதந்திரிபோல பாசாங்கு செய்ததாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் இலங்கையில் அமைச்சர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்த வாகனத்தை, அதே இலக்கத்தகட்டுடன் பாவித்து வந்துள்ளார்.

எனினும் குறித்த இலக்கம் கடந்த ஜுலை மாதம் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ரத்து செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் சஹ்டாரா – கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment