இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு இன்றையதினம் அலரி மாளிகையில் ஆரம்பமாகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வந்துள்ளார்.
அவர் இன்றைய மாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை இந்த மாநாட்டின் நிமித்தம் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.