அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததையொட்டி பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜே.எப்.கே. எனப்படும் ஜே.எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது.
சுமார் 9.30 மணியளவில் 8-வது டெர்மானலில் புறப்படும் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. பயணிகள் அங்கு மிங்கும் முண்டியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஜே.எப்.கே (ஜான். எப்.கென்னடி) விமான நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அங்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த தகவலை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
ஆனால் இதை நியுயார்க் பாதுகாப்பு துறை உறுதி செய்யவில்லை. இருந்தாலும் துப்பாக்கி சூடு நடந்ததாக தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.