வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

270 0

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.

சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸாரும், புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment