வித்தியா கொலை வழக்கு ; சுவிஸ்குமார் தொடர்பில் அவரது மனைவி சாட்சியம்

266 0

வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி, மன்றில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு முதன்மை மன்று அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிரி தரப்பு சாட்சியங்கள் நேற்று நடைபெற்றன.

இதன்போது, ‘2015 மே மாதம் 8ஆம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் வெள்ளவத்தையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்’ என்று சுவிஸ் குமாரின் மனைவி சாட்சியமளித்துள்ளார்.

‘நான் சிவிஸ்குமாரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். அவர் வருடத்திற்கு ஒருமுறை நாட்டிற்கு வருவார். 2015.05.08 அன்றிலிருந்து 2015.08.12 வரை, எனது கணவர் என்னுடன் வெள்ளவத்தையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்’ என்றார்.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம், குறுக்கு விசாரணை செய்த போது, உங்கள் கணவர் உங்களுடன் இருந்தமைக்கு சாட்சியம் இருக்கின்றதா? என்று கேட்டார்.

அதற்கு சுவிஸ்குமாரின் மனைவி ‘இல்லை’ என கூறினார்.

எதிரி தரப்புச் சாட்சியங்கள் நேற்று நிறைவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு தொகுப்புரைக்காக ஆரம்பமாகவுள்ளது.

Leave a comment