இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்திய வௌிவிவகார செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரை வரவேற்பதற்காக இந்நாட்டு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் போன்று வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலரும் விமானநிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.