வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பு செய்வது தொடர்பிலான பிரச்சினைகள் குறித்த விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வட மாகாண ஆளுனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வடக்கிலுள்ள தெல்லிப்பளை, மாதகல், புங்குடுத்தீவு, ஆணைக்கோட்டை, மண்டைத்தீவு ஆகிய ஐந்து துறைமுகங்களை மீள்நிர்மாணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப் பகுதியில் மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்கும் நிலையம் மற்றும் மீன் களஞ்சியசாலை போன்றவற்றையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.